சிதறிக்கிடந்த மல்லிகைப்பூக்கள்... முன்னாள் ராணுவ வீரர் கொலையில் திடீர் திருப்பம்Sponsoredசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணை விற்பனை நிலையத்தில் காவலாளியாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் ஆவின் பால் பண்ணை விற்பனை நிலையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் காட்பாடி, திருமால்நகரைச் சேர்ந்த குமாரசாமி, காவலாளியாக பணியாற்றினார். இவர், முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வரவேற்பு அறையில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``குமாரசாமியும், ஆனந்தனும் முன்னாள் ராணுவ வீரர்கள். இவர்கள் இருவரும் மாறி, மாறி செக்யூரிட்டியாக ஆவின் பால் பண்ணை விற்பனை நிலையத்தில் பணியாற்றிவந்துள்ளனர். அந்த அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக செஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணியாற்றியுள்ளனர். அவர்களுடன் குமாரசாமிக்கு பழக்கம் இருந்துள்ளது. விடுமுறையில் குமாரசாமி இருக்கும் நாள்களில் அந்தப் பெண்களுடன் ஆனந்தன் பழகியுள்ளார். இதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், பணி தொடர்பாகவும் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், குமாரசாமியைக்  கொலைச் செய்யதிட்டமிட்டுள்ளார். இரவுப் பணியில் இருந்த குமாரசாமியை கொலை செய்துவிட்டு ஆனந்தன் தப்பிவிட்டார்.

குமாரசாமி சடலம் கிடந்த இடத்தின் அருகில் மல்லிகைப் பூக்கள் சிதறிக்கிடந்தன. இதனால், பெண் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தோம். தொடர்ந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆனந்தன், அலுவலகத்துக்குள் வந்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் அவரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதையடுத்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

Sponsored


போலீஸாரிடம் ஆனந்தன் கொடுத்த வாக்குமூலத்தில், ``குமாரசாமி என் மீது தேவையில்லாமல் அலுவலகத்தில் புகார் தெரிவித்துவந்தார். குறிப்பாக நான் பணியில் இருக்கும்போது அதிகளவில் திருட்டு நடப்பதாக உயரதிகாரிகளிடம் கூறினார். இதனால், உயரதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தினர். மேலும், குமாரசாமிக்கு அலுவலகத்தில் பணியாற்றும் சில பெண்களுடன் பழக்கம் இருந்தது. அவர்கள் மூலம் எனக்கு டார்ச்சர் கொடுத்தார். மேலும், அந்தப் பெண்களுடன் நான் பேசியதையும் அவர் தட்டிக்கேட்டார். இதனால்தான் குமாரசாமியை கொலைச் செய்தேன்" என்று கூறியுள்ளார். 

மல்லிகைப் பூக்கள் குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``ஆவின் அலுவலக அதிகாரிகளைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, மாலைகளை வாங்கி வருவதுண்டு. அவ்வாறு வாங்கி வரப்பட்ட மாலை, பூங்கொத்திலிருந்து சிதறிய மல்லிகைப் பூக்கள்தான் அவை. பூக்களைப் பார்த்ததும் முதலில் நாங்கள் வேறுவிதமாக சந்தேகித்துவிட்டோம். விசாரணையில்தான் மல்லிகைப் பூக்கள் குறித்த விவரம் தெரியவந்தது. குமாரசாமிக்கு தெரிந்த இரண்டு பெண்களிடம் விசாரித்தோம். அவர்களும் சில முக்கிய தகவல்களை எங்களிடம் தெரிவித்தனர். அதன்பிறகே ஆனந்தன் சிக்கினார். குமாரசாமிக்கும் ஆனந்தனுக்கும் 50 வயதுக்கு மேலாகிறது. இருவருக்கும் திருமணமாகி குடும்பமும் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் காட்பாடி. இதனால் நட்பாகத்தான் பழகியுள்ளனர். அதன்பிறகு நடந்த சில சம்பவங்கள்தான் இருவரையும் எதிரிகளாக்கியுள்ளது. குறிப்பாக பெண்கள் நட்பு, திருட்டு சம்பவங்கள் ஆகியவற்றால் குமாரசாமி கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றார்.Trending Articles

Sponsored