மீண்டும் வளர்மதி கைது! - போலீஸை தாக்கியதாகப் புகார்Sponsoredஎங்களை எப்படி போட்டோ எடுக்கலாம் என்று காவலரை வளர்மதியுடன் வந்த டீம் அடித்து உதைத்ததாகக் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் தப்பாட்டையை அடித்துக்கொண்டு இயற்கை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி மற்றும் 5 பேர் கேரளாவுக்கு நிவாரண நிதி திரட்டிக்கொண்டிருந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்) காவலர் ஸ்டாலின், அங்கு வந்தார். அவர், தன்னுடைய செல்போனில் அவர்களை போட்டோ பிடித்துள்ளார். இதற்கு வளர்மதியுடன் வந்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களை எப்படி போட்டோ எடுக்கலாம் என்று காவலர் ஸ்டாலினிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், நான் காவலர் என்று கூறியபடி ஐடி கார்டையும் எடுத்துக் காண்பித்துள்ளார். அதன்பிறகு காவலர் ஸ்டாலின் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் பெரியமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து, வளர்மதி மற்றும் அவருடன் இருந்த 5 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி, 6 பேரையும் கைது செய்துள்ளனர். 

Sponsored


இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ``அனுமதியில்லாமல் தப்பாட்டம் நடத்தியும், ஒலிபெருக்கி மூலம் கேரளாவுக்கு நிவாரண நிதியை வளர்மதி மற்றும் அவருடன் வந்தவர்கள் வசூலித்துள்ளனர். வழக்கமாக நுண்ணறிவுக் காவலர்கள் இதுபோன்ற சம்பவங்களை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுப்பதுண்டு. அதுபோலத்தான் காவலர் ஸ்டாலினும் போட்டோ எடுத்துள்ளார். இதனால், ஸ்டாலினை வளர்மதியுடன் இருந்தவர்கள் தாக்கியுள்ளனர். ஸ்டாலின் கொடுத்த புகாரின்பேரில் வளர்மதி, அருண்குமார், காளிமுத்து, மணிவண்ணன் மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேரை கைது செய்துள்ளோம்" என்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored