`இதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க!’- டீக்கடைக்காரரை குஷிப்படுத்திய பன்னீர் செல்வம்!



Sponsored



திருப்போரூரில் அ.தி.மு.க தொண்டர் ஒருவர் நடத்திவரும் டீக்கடையில் டீ குடித்து அவருக்கு வாழ்த்துச் சொன்னார் துணைமுதல்வர் பன்னீர் செல்வம். இதனால் அந்த டீக்கடைக்காரர் நெகிழ்ச்சி அடைந்தார்.

மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் யஸ்வந்த்ராவின் அண்ணன் மகன் திருமணத்துக்காக இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். கோயிலுக்கு வெளிப்புறத்தில் மைத்ரேயன் ஆதரவாளர் கலைச்செல்வன் என்பவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கலைச்செல்வனின் தந்தை தொடங்கிய இந்த டீக்கடை ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் டீக்கடை’ என்ற பெயரில் கடந்த 50 ஆண்டுகாலமாக இருக்கிறது. பன்னீர் செல்வம் திருப்போரூர் வரும் தகவலை அடுத்து அந்த டீக்கடைக்காரர், அவரை வரவேற்கும் விதமாகச் சிவப்பு கம்பளம் விரித்து வைத்திருந்தார். அந்த வழியாகச் சென்ற பன்னீர்செல்வத்துக்கு கலைச்செல்வன் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, ‘நான் கல்யாணத்துக்குச் செல்கிறேன். நேரமாகிவிட்டது. அதைக் முடித்துவிட்டுத் திரும்ப வரும்போது உங்கள் டீக்கடைக்கு நிச்சயம் வருகிறேன்’ என்றார். சொன்னது போலவே திருமணம் முடிந்த பிறகு அந்த டீக்கடைக்கு வந்தார் பன்னீர் செல்வம்.

Sponsored


அப்போது பன்னீர் செல்வத்துக்கு கலைச்செல்வன் டீயை கொண்டுவந்து கொடுத்தார். அதைக் கையில் வாங்கிய பன்னீர் செல்வம் ‘மாட்டுப்பாலா… பாக்கெட் பாலா?’ என்றார். ‘மாட்டுப்பால்’ என்றதும் ‘பாய்லரா… கேஸ் வச்சிருக்கீங்களா?’ எனக் கேட்டார் பன்னீர் செல்வம். பாய்லர்லதான் டீ போடுறோம் என்று கலைச்செல்வன் சொன்னார். இதைக்கேட்டதும், ‘பழைமை மாறாம அப்படியே இருக்கீங்க. இதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க...’ என்றார் பன்னீர் செல்வம். 15 நிமிடங்கள் அந்தக் கடையில் உட்கார்ந்திருந்தார் பன்னீர் செல்வம்.

Sponsored




Trending Articles

Sponsored