மல்லிகை 700 ரூபாய்; கனகாம்பரம் 1600 ரூபாய்!- ஓசூரில் களைகட்டிய வியாபாரம்Sponsoredவரலட்சுமி விரதம் கர்நாடகாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதால் ஓசூர் பூ மார்க்கெட்டில் அதிக விலைக்குப் பூக்கள் விற்பனையானதால் பூ வியாபாரிகளும், பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

காரணம், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பூக்களின் விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு பூக்களின் விலை புதிய உச்சத்தைத் தொடவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்துக்குப் பிறகு, கடந்த ஆறு மாதங்களாகப் பூக்களின் விலை உயர்வில் ஒருவித தேக்கநிலை நீடித்து வந்தது. இதற்கு கேரளாவில் அதிகளவு மழை பெய்ததே காரணம். 

Sponsored


கேரளாவில் அதிகளவு மழை பெய்ததால் இந்தமுறை கேரள மக்கள் ஓணம் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. இதனால் ஓசூர் பகுதிகளில் மட்டும் 15 கோடி ரோஜா பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கநிலை ஏற்பட்டது. இதனால் பூ விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். 

Sponsored


இந்த நிலையில், கர்நாடகாவில் வரலட்சுமி விரதத்தை எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்ததுபோலவே ஓசூர் மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாகப் பூக்களின் தேவை அதிகரித்தது. வரலட்சுமி விரதம் விழாவை ஒட்டி ஓசூர் பூ மார்க்கெட்டில் சாமந்தி மஞ்சள் கலர் கிலோ ரூபாய் 100க்கும், வெள்ளை 160க்கும், ரோஸ் 180 ரூபாய்க்கும், மல்லிகை 700 ரூபாய்க்கும் கனகாம்பரம் 1600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடும்போது 50% குறைவு என்றாலும் பூ வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Trending Articles

Sponsored