`14 வயதில் மூன்றரை அடி உயரம்... 8 வயதில் இரண்டடி உயரம்' - எப்போதும் இவர்கள் குழந்தைகள்தாம்Sponsoredசென்னை தி.நகரைச் சேர்ந்த விஜயகுமார், விஜயலட்சுமி தம்பதிக்கு ஹேமலதா, சுவாதி என இரண்டு மகள்கள் உள்ளனர். 14, 8 வயதாகும் இவர்கள் இப்போதும் பச்சிளம் குழந்தைகள்தாம்.

சென்னை, தி.நகர், தர்மாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஹேமலதா, சுவாதி என இரண்டு மகள்கள் உள்ளனர். ஹேமலதாவுக்கு 14 வயதும் சுவாதிக்கு 8 வயதும் ஆகின்றன. ஆனால், இருவரும் இப்போதும் பச்சிளம் குழந்தைகள்தாம். அவர்கள் இருவரையும் குழந்தைகளைப்போல கவனித்துவருகின்றனர் விஜயகுமாரும் விஜயலட்சுமியும். காலையிலிருந்து இரவு வரை குழந்தைகளைக் கவனிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவழிக்கிறார் விஜயலட்சுமி. இரண்டு குழந்தைகளையும் கவனிக்க முடியாததால் விஜயலட்சுமியின் அம்மா தேவிகா, சுவாதியைப் பார்த்துக்கொள்கிறார். 

Sponsored


இரண்டு மகள்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த இந்தத் தம்பதியின் வேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் குழந்தைகளை மனநிறைவோடு கவனித்துவருகின்றனர். இந்தத் தகவல் நமக்குக் கிடைத்ததும் தி.நகர் தர்மாபுரத்துக்குச் சென்றோம். அங்கு, ஹேமலதா, குழந்தைக்குரிய கள்ளம் கபடமில்லாமல் நம்மைப்பார்த்துச் சிரித்தார்.

Sponsored


விஜயகுமார்தான் முதலில் நம்மிடம் பேசினார். ``என்னுடைய மாமன் மகள்தான் விஜயலட்சமி. எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் பலர் சொந்தத்தில்தான் திருமணம் செய்திருக்கின்றனர். என் தம்பிகூட சொந்தத்தில்தான் திருமணம் செய்திருக்கிறார். எல்லோரைப் போலத்தான் நாங்களும் எங்களின் இல்லற வாழ்க்கையைச் சந்தோஷமாகத் தொடங்கினோம். நான், பிளம்பராகப் பணியாற்றுகிறேன். அந்த வருமானமே என்னுடைய குடும்பத்தை நடத்த போதுமானதாக இருந்தது. விஜயலட்சுமி, கர்ப்பமானதும் நான் மட்டுமல்ல, எங்கள் குடும்பமே சந்தோஷமடைந்தோம். அவரை, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் வளர்ச்சியில் சில பிரச்னைகள் இருப்பதாகக் கூறினர். இருப்பினும் முதல் குழந்தை ஹேமலதா பிறந்தார். அவரின் தலை சிறியதாக இருந்தது. மேலும் மூளை வளர்ச்சியிலும் குறைபாடு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். `மைக்ரோ செஃப்டிக்' என்ற நோயால் ஹேமலதா பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறினர். சிறப்பு குழந்தையான ஹேமலதாவை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம். 14 வயதாகும் அவர், இப்போதும் எங்களுக்குக் குழந்தைதான். அவரின் உயரம் மூன்றரை அடிதான். 

ஹேமலதாவுக்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தை குறித்து டாக்டர்களிடம் ஆலோசித்தோம். அதன் பிறகு விஜயலட்சுமி, மீண்டும் கர்ப்பமடைந்தார். அவரை மாதந்தோறும் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றேன். குழந்தை நார்மலாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்துகூட டாக்டர்கள் எதுவும் எங்களிடம் சொல்லவில்லை. இரண்டாவதாக சுவாதி பிறந்தார். அவரும் மைக்ரோ செஃப்டிக் என்ற தகவலை டாக்டர்கள் கூறியதும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியடைந்தோம். என்ன செய்வது சுவாதியையும் குழந்தைபோல கவனித்துவருகிறோம். தற்போது சுவாதிக்கு 8 வயதாகிறது. அவரின் உயரம் இரண்டு அடிதான். இரண்டு சிறப்பு குழந்தைகளை ஒரே ஆளாக விஜயலட்சுமியால் கவனிக்க முடியவில்லை. இதனால் செங்கல்பட்டு, மாமண்டூரில் சுவாதியை என்னுடைய மாமியார் கவனித்துவருகிறார்'' என்று சொல்லும்போதே அவரின் கண்கள் கலங்கின. 

 

அடுத்ததாகப் பேசிய விஜயலட்சுமி,  ``ஹேமலதாவும் சுவாதியும் எங்களுக்குக் கடவுள் கொடுத்த கிஃப்ட்தான். அவர்களை கவனித்துக் கொள்வதில் எங்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. ஹேமலதாவுக்கு அரசு தரப்பிலிருந்து 1,500 ரூபாய் உதவித்தொகை வருகிறது. சுவாதிக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளோம். எங்கள் காலத்துக்குப் பிறகு அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. காலைக்கடன் முதல் எல்லாவற்றையும் நாங்கள்தான் பார்த்து, பார்த்து செய்ய வேண்டும். பசித்தால்கூட அவர்களுக்கு அதைச் சொல்லத் தெரியாது. மூன்று வேளையும் நாங்கள்தான் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவர்களைவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது. இந்தச் சமுதாயத்தில் சிலரின் பேச்சுகள் பல நேரங்களில் எங்களுக்குக் வருத்தத்தை அளித்துள்ளது. அப்போதெல்லாம், எங்களின் நிலைமை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று நினைத்ததுண்டு" என்றவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. அவரை சமாதானப்படுத்தினார் விஜயகுமார். 

தொடர்ந்து விஜயகுமார், ``சார், எனக்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். என்னுடைய இரண்டு மகளுக்கு மருத்துவச் செலவு 8,000 ரூபாய் வரை ஆகும். மீதமுள்ள தொகையை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறோம். டயாபருக்காகவே மாதம் குறிப்பிட்ட தொகை செலவாகிவிடும். அரசு ஏதாவது உதவி செய்தால் நல்லா இருக்கும். இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்குச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார். Trending Articles

Sponsored