உடைந்து நின்ற முக்கொம்பு அணை... முதல்வர் வந்ததும் ஆய்வுக்கு வந்த மக்கள் பிரதிநிதிகள்!Sponsoredகொள்ளிடம் முக்கொம்பு அணை உடைந்ததை ஆய்வுசெய்யாமல், அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டது, அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, முக்கொம்பு. இங்குதான் காவிரியாறு அகண்ட காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. ஆங்கிலேயர் காலத்தில், காவிரியில் அதிக அளவிலான வெள்ளம் வந்தபோது, அப்பகுதி முழுவதும் சேதமடைந்தன.  அதனால், ஆங்கிலேய ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றிய தமிழக நீர்ப்பாசன வேளாண்மையின் தந்தையான ஆர்தர் காட்டன், காவிரி பாய்ந்தோடும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவதற்கு அணைகளைக் கட்டத் திட்டமிட்டார்.

 ஆர்தர் காட்டன், தஞ்சை மாவட்டம் கல்லணை மற்றும் திருச்சி முக்கொம்புப் பகுதிகளில் அணைகள் கட்டுவதற்கு திட்டமிட்டார். அதனடிப்படையில், கல்லணையைத் தொடர்ந்து 1836-ம் ஆண்டு சுமார் 182 மீட்டர் நீளத்தில் கொள்ளிடம் முக்கொம்பு அணையைக் கட்டினார்.

Sponsored


Sponsored


45 ஷட்டர்கள் கொண்ட இந்த அணையைக் கட்டுவதற்கு, அப்போதைய ரூபாய் மதிப்பில், சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்யப் பட்டதாக சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், காவிரியில் வெள்ளம் வந்தால், பெருவெள்ளத்தைக் கொள்ளிடத்தில் இருந்து மடை மாற்றித் திருப்ப வழிவகைசெய்யும் விதத்தில் அந்த அணை வடிவமைக்கப்பட்டது.

மேலும், சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரைத் தேக்கிவைத்து அனுப்பலாம் என்கிற வகையிலும் அந்த அணை உருவாக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  அதிகபட்சமாக முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் 1 லட்சத்து 67 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், ''அணையைப் பராமரிக்காததாலும் அதிக அளவு தண்ணீரைத் தேக்கிவைத்ததாலுமே கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது'' என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இதனால், கடந்த 17-ம் தேதி பொதுப்பணித் துறை அதிகாரிகள், திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் ஆய்வு செய்ததாகக் கூறப்பட்டது. அப்போது ஏற்பட்ட விரிசலை அதிகாரிகள் செய்யவில்லை என்றும், தொடர்ந்து அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்தை அனுமதித்ததாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் அணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதையடுத்து,  பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளரும் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினருமான பிரபாகர் ஐ.ஏ.எஸ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த அணை உடைந்தது தொடர்பாக விசாரணை நடத்தி தமிழக முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்போவதாகக் கூறினார்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணைப் பாலம்  இடிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி வாத்தலை, வடகரை, துடையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராமப் பொதுமக்கள் 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அக்கரைக்கு வரவேண்டிய சூழல் நிலவுகிறது. இன்று காலை முதல், உடைந்த அணையின் பகுதிகளைச் சீரமைக்க, கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. 

இதை ``முன்கூட்டியே கணித்து, முக்கொம்பு அணையின் மதகுகளைச் சீரமைக்கத் தவறியது ஏன்? அணைகள் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு அக்கறையின்றி இருக்கிறது. கொள்ளிடம் பாலம், முக்கொம்பு மேலணை பாதிப்புக்கு அ.தி.மு.க அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.  அரசு, அணை உடைப்பை முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டது'' என்று எதிர்க் கட்சியினர் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நேரில் சென்று அணையை ஆய்வுசெய்தார். அவருடன் காமராஜ், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், சரோஜா உள்ளிட்ட அமைச்சர்களும், திருச்சி மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. குமார்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திலிங்கம், ரத்தினவேலு ஆகியோரும், சட்டமன்ற உறுப்பினர்களான பரமேஸ்வரி, செல்வராஜ் ஆகியோரும் இந்த ஆய்வுப் பணியில் இருந்தனர். 

``அணை உடைந்த நாளிலிருந்து இன்றுவரை அதிகாரிகள் மட்டுமே அந்த அணையை ஆய்வுசெய்துவருகிறார்கள். ஆனால், திருச்சியில் இரண்டு அமைச்சர்களும், பக்கத்து மாவட்டமான கரூரில் ஒரு அமைச்சரும் இருக்கிறார்கள். இதுதவிர, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாரும், தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கொம்பு மேலணையைப் பார்வையிட உடனே வரவில்லை. மக்கள் பிரச்னையைத் தீர்க்க உடனே ஓடிவராத அவர்கள் அனைவரும் சென்னையில் நடந்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது'' என்கின்றனர், அந்தப் பகுதி மக்கள்.Trending Articles

Sponsored