ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி மணல் கடத்தல் - அதிகாரிகளின் திடீர் சோதனையில் சிக்கிய டிப்பர் லாரிகள்!Sponsored வெளியூர்களில் இருந்து அனுமதியின்றி கடத்திவரப்பட்ட மணல் டிப்பர் லாரிகளை ராமநாதபுரம் கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் தங்கும் விடுதிகள், குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் அரசு கட்டடப் பணிகள் என ஏராளமான பணிகள் நடந்துவருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், தீவுப் பகுதியில் கிடைப்பதில்லை. இதனால், ராமேஸ்வரம் தீவுக்கு வெளியில் இருந்து ஏராளமான டிப்பர் லாரிகளில் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல்கள் கொண்டுவரப்படுகின்றன. இதில்,பாதிக்கு மேல், உரிய அனுமதி இன்றி முறைகேடாகக் கொண்டுவரப்படுகிறது. இதேபோல, ராமேஸ்வரம் தீவில் உள்ள மணல் திட்டுகளில் இருந்தும் அனுமதி இன்றி மணல் அள்ளப்பட்டுவருகிறது. 

Sponsored


இந்நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் ராமநாதபுரம் கனிம வளத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது,  மணல் ஏற்றிவந்த இரண்டு டிப்பர் லாரிகளை மடக்கி ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வில், முறையான அனுமதி இன்றி மணல் ஏற்றிவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மணல் ஏற்றிவந்த இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல்செய்த கனிம வளத்துறையினர்,அவற்றை ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல்செய்யப்பட்ட டிப்பர் மணல் லாரிகளுக்கு, ராமேஸ்வரம் வட்டாட்சியரிடம் உரிய அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் அவை விடுவிக்கப்படும். 

Sponsored
Trending Articles

Sponsored