`பா.ஜ.க - தி.மு.க கூட்டணி என்பது வெறும் யூகமே' - வைகோ பேட்டி!Sponsoredகும்பகோணத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தி.மு.க-வின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.410 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்ததை ஏன் நிறைவேற்றப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ``தமிழக அரசு நீர் மேலாண்மை கடமையைச் சரிவரச் செய்ய தவறிவிட்டது. ஆறு, வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரவில்லை. தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளையைத் தடுக்கத் தமிழக அரசு தவறிவிட்டது. அணைகள், மதகுகளைத் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் செய்யவில்லை. இதன் விளைவாகத்தான் பழைமைவாய்ந்த முக்கொம்பு அணையின் கதவணைகள் உடைந்தன. இன்னும் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.410 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்தார். அது ஏன் நிறைவேற்றப்படவில்லை. குதிரை ஓடிய பின்னர் லாயத்தைப் பூட்டுவதுபோல முக்கொம்பு அணை சேதம் அடைந்த பின்னர் பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Sponsored


ஏற்கெனவே முக்கொம்பு கதவணையில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதை அப்போதே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சீர் செய்திருக்க வேண்டும். இதைத் தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தின் இயற்கை செல்வம் மணல். அது பல ஆண்டுக் காலமாகக் கொள்ளை போய்க்கொண்டு இருக்கிறது. அதைத் தடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அணைகள், மதகுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

Sponsored


பா.ஜ.க - தி.மு.க கூட்டணி என்பது வெறும் யூகத்தின் அடிப்படையில் பேசப்படுகிறது. வாஜ்பாய் இறந்தபோது நாங்கள் எல்லோரும் சென்றோம். அதுபோல் மாபெரும் தலைவர் புகழஞ்சலி நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதுகுறித்து தி.மு.க-வே தெளிவாகக் கூறிவிட்டது. தி.மு.க-வின்  தலைவர் பொறுப்பேற்க  உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.Trending Articles

Sponsored