`மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை' - மாணவி பாலியல் தொல்லை வழக்கில் விசாரணை தொடக்கம்!  



Sponsored



திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவிக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே, வாழவச்சனூரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்தக் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, அங்கு பணியாற்றும் பேராசிரியர் தங்கபாண்டியன் (40), கடந்த ஜனவரி மாதம் முதல், விடுதிக்குச் சென்று பாலியல் தொல்லைகொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, விடுதிக் காப்பாளர்கள் மைதிலி மற்றும் புனிதா ஆகிய இருவரும் பேராசிரியருக்கு உடைந்தயாக இருந்ததாக அந்த மாணவி கடந்த 20-ம் தேதி புகார் கொடுத்தார். அதனடிப்படையில்,பேராசிரியர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம்மூலம் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது. திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் நடைபெற்ற விசாரணை, 7 மணி நேரத்துக்குப் பிறகு தற்போது முடிவுபெற்றது. இதில், கோவை வேளாண் பல்கலைக்கழக உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் சாந்தி, செய்தியாளர்களைச் சந்தித்தார். 

Sponsored


அப்போது, இந்த குற்றச்சாட்டுகுறித்துப் பேசிய அவர், ``உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன், புனிதா, மைதிலி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்கள், விடுதிப் பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணைசெய்யப்பட்டது. இந்த அறிக்கையை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்போகிறேன். மூன்று மாதத்துக்குள் முழுமையாக இந்த விசாரணை முடியும்" என்று தெரிவித்தார். 

Sponsored


மேலும், ``மாணவியை விசாரணைக்கு அழைத்தோம். மாணவி விசாரணைக்கு வராததால் முழு விசாரணைசெய்ய முடியவில்லை. இந்த விசாரணை மூன்று மாத காலத்துக்குள் முடியும்" என்று தெரிவித்தார்.



Trending Articles

Sponsored