சுருளி அருவியில் பாதுகாப்பு கம்பி சேதம்.. உடனே சீர் செய்யக் கோரிக்கை!Sponsoredதேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இங்குச் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் இடத்திற்கு அருகே உள்ள பாதுகாப்பு கம்பி சேதமடைந்துள்ளதால், அதனைச் சரிசெய்து கொடுக்குமாறு சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தினமும் ஆயிரத்திற்கும் குறையாத சுற்றுலாப்பயணிகள் சுருளி அருவிக்கு வருவது வழக்கம். விடுமுறை நாள்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கும் பகுதியில் இருந்த பாதுகாப்பு கம்பி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. மேலும், கீழ் பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் குழாயும் உடைந்துள்ளது. இதனைச் சரி செய்து கொடுக்குமாறு, சுற்றுலாப்பயணிகளும், சுருளி அருவிப் பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Sponsored


இது தொடர்பாக, கம்பம் கிழக்கு ரேஞ்சர் தினேஷிடம் பேசிய போது, "வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் தற்போது குளிக்கத் தடை தொடர்கிறது. கீழே உள்ள ஆற்றில் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அருவியில் குளிக்கும் இடத்தில் உள்ள பாதுகாப்புக் கம்பி சேதமடைந்திருக்கிறது, கூடவே, சுற்றுலாப்பயணிகள் குடிப்பதற்காக இருந்த குழாயும் உடைந்திருக்கிறது. இதனால், அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சற்று சிரமப்படுகிறார்கள். பாதுகாப்பு கம்பி மற்றும் தண்ணீர் குழாய் இரண்டையும் சரிசெய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், அருவியில் தண்ணீர் இன்னும் குறையவில்லை. தண்ணீர் குறைந்ததும் அவை சரிசெய்யப்படும். இப்போதைக்கு குடிநீருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored