`24 மணிநேரமும் என்னை தொடர்புகொள்ளலாம்' - ராமநாதபுரம் புதிய கலெக்டரின் க்ரின் சிக்கல்



Sponsored



பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்க விரைவில் முகநூல் பக்கம் தொடங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த நடராஜன் மதுரை மாவட்ட ஆட்சியராகவும், மதுரையில் ஆட்சியராக பணியாற்றிய வீரராகவராவ் ராமநாதபுரம் ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட வீரராகவராவ் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தார்.

ராமநாதபுரம் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வீரராகவராவ், ``ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். இயற்கையைப் பாதுகாத்து பூமித்தாயை காப்பாற்றும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பிளாஸ்டிக் ஒழிப்பில் கவனம் செலுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம் 237 கி.மீ.தூரம் உள்ள நீண்ட கடற்கரை மாவட்டம். இங்கு 42,600 மீனவக் குடும்பங்கள் இருப்பதால், மீனவர்கள் நலனிலும், விவசாயிகள் நலனிலும் மிகுந்த கவனம் செலுத்தப்படும். தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் நேரடியாக மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலைகள் மேம்படுத்துதல், வாறுகால்கள் சீரமைத்தல் ஆகிய பணிகளைச் சிறப்பாகச் செய்ய முழு முயற்சி மேற்கொள்ளப்படும். திறன் வளர்ப்பு பயிற்சிகள் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பிரதமரின் தூய்மை பாரத இயக்கம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைகள், புகார்களைத் தெரிவிப்பதற்காக முகநூல் பக்கம் ஒன்று விரைவில் தொடங்கப்படும். அதில் பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களை உடனுக்குடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் 24 மணிநேரமும் தன்னைத் தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம்'' எனத் தெரிவித்தார்.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored