தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு!



Sponsored



இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்திலிருந்து ஒரு ஆசிரியர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் (செப்டம்பர் 5-ம் தேதி) ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து, அவர்களது சேவையைப் பாராட்டி இந்நாளில் குடியரசுத் தலைவர் விருது வழங்குவார். ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு மாநிலங்கள் வாரியாக விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்துவிட்டது. அதேபோல், நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் முறையிலும் கடுமையான விதிமுறைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவந்தது. இதனால், பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த கல்வி அதிகாரிகளே பட்டியல் தயாரிக்கும் முறையானது முற்றிலுமாக முடக்கப்பட்டது. 

Sponsored


அதன் வகையில், இந்த ஆண்டு 45 விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், தமிழகத்துக்கு 6 விருதுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது. இதையடுத்து, தமிழகம் சார்பில் 6 ஆசிரியர்கள் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். இந்த நிலையில், 6-ல் ஒருவர் மட்டுமே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Sponsored


தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.ஸதி என்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Trending Articles

Sponsored