விழாவுக்கு வருவதில் தாமதம் - தேனியில் ஓ.பி.எஸ் பேனர் கிழிப்பு!Sponsoredதேனியில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம் முப்பெரும் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை என்று கூறி அவரது பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றதால் அப்பகுதியே பதற்றமானது.

தேனி பெரியகுளம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் (முடி திருத்தம் செய்வோர்) சார்பாக முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளவதாக கூறப்பட்டது. இந்நிலையில், பணி காரணமாக அவர் மாலைதான் வருவார் என்ற தகவல் வந்ததைத் தொடர்ந்து, தங்களது நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் ஏன் வர மறுக்கிறார் என்ற கேள்வியோடு மருத்துவ நலச்சங்கத்தினர் ஏராளமானோர் ஒன்று கூடி தேனி - பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், பன்னீர்செல்வத்தை வரவேற்கும் விதமாக அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்து எரிந்தனர். இந்தநிலையில், விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்துக்குத் தாமதமாக வந்த ஓ.பன்னீர்செல்வம், சிறிதுநேரம் அங்கு இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டுச் சென்றார். ஓ.பன்னீர்செல்வம் வந்ததை அடுத்து போராட்டக்காரர்கள் அமைதியானார்கள்.

Sponsored


இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் கேட்ட போது, "18ம் கால்வாய் விரிவாக்கப் பணி முடிவடைந்து இன்று அக்கல்வாயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பன்னீர்செல்வம் சென்றுவிட்டார்’ என்றதோடு முடித்துக் கொண்டனர்.  

Sponsored
Trending Articles

Sponsored