பா.ஜ.க எதிர்கட்சிதான்; எதிரிக் கட்சி அல்ல..! - துரைமுருகன் விளக்கம்



Sponsored



பா.ஜ.க எங்களுக்கு எதிர் கட்சிதான்; ஆனால் எதிரிக் கட்சி இல்லை என வேலூரில் தமிழ் சங்கம் நடத்திய கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.

வேலூர் தமிழ்ச்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று வேலூரில் நடைபெற்றது. இதில் தி.மு.க, காங்கிரஸ், த.மா.கா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்துகொண்டனர். இதில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில்,'கருணாநிதி எப்போதும் நகைச்சுவையுடன் பேசுவார். அடுத்தவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பார். முடிவு எடுத்து, விரைவாக அந்த முடிவை செயல்படுத்துவார். மற்றவர்களிடம் கலந்தாலோசிக்கவும் அவர் தவறமாட்டார். அப்படிப்பட்டவர்களுக்கு தமிழ் சங்கம் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

Sponsored


நாடாளுமன்ற உறுப்பினரே அல்லாத ஒருவருக்காக இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைத்தது இந்தியாவில் இதுதான் முதல் முறை. அதுபோல், மத்திய அரசுக்கும் எங்களுக்கு கொள்கை வேறுபாடு இருந்தாலும் பா.ஜ.கவை எதிரி என்று சொல்ல முடியாது. மத்தியில் உள்ள பா.ஜ.க எங்களுக்கு எதிர்க்கட்சி தான். ஆனால் எதிரிக் கட்சியில்லை’’ என்று தெரிவித்தார்.

Sponsored




Trending Articles

Sponsored