`ஸ்டாலினுக்கு நானும் முன்மொழியனுமா?' - டென்ஷனான மு.க.அழகிரி!தினம் ஒரு தகவல் என்பது போல தி.மு.க அல்லது ஸ்டாலினுக்கு எதிராக தினம் ஒரு கருத்தை வெளிப்படுத்தி வருகிறார் மு.க.அழகிரி.

Sponsored


கருணாநிதி மறைவினை தொடர்ந்து செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் தன் பலத்தை காட்டும் வகையில் மிகப்பெரிய அமைதிப்பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ள மு.க.அழகிரி, அதற்காக ஆதரவாளர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 24-ம் தேதி முதல் மதுரையிலுள்ள தன் வீட்டு வளாகத்தில் பல மாவட்டங்களிலிருந்து வரும் ஆதரவாளர்களிடம் சென்னைப் பேரணியை பிரமாண்டமாக  நடத்துவது பற்றி  ஆலோசனை நடத்தி வருகிறார்.

Sponsored


செப்டம்பர் 5 ஆம் தேதி பேரணிக்குப் பின்புதான் செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசுவேன் என்று கூறியுள்ள அழகிரி, அவ்வப்போது ஒரு சில கருத்துக்களை மட்டும் கூறிஅதிரடி கிளப்பி வருகிறார். இன்று தொடர்ந்தஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அழகிரியிடம்,  "தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாரே...." என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதற்கு நான் என்ன செய்வது..., என்னை முன்மொழிய சொல்கிறீர்களா....?" என்று டென்ஷனாக கேட்டவர்,  "வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் சந்திப்போம்" என்று, இன்றொரு தகவலை கூறிவிட்டு சென்றார்.

Sponsored
Trending Articles

Sponsored