`ஆசீர்வாதம், வாழ்த்து, ஆரவாரம்' - தி.மு.க தலைவராவதற்கு ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பு!



Sponsored



தி.மு.க தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறு நாள் நடைபெற உள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்த ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

கருணாநிதி இறந்த பிறகு தி.மு.க தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. கட்சி விதிப்படி தேர்தல் நடத்தித் தான் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தலுக்கான வேட்பு மனுவை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் இன்று தாக்கல் செய்தார்.

Sponsored


Sponsored


ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று சமாதியில் வேட்பு மனுவை வைத்து ஆசீர்வாதம் பெற்றார். பிறகு அருகில் உள்ள அறிஞர் அண்ணா சமாதியில் வைத்தும் ஆசி பெற்றார். அங்கு கருணாநிதி நினைவிடத்துக்கு அருகில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்து ஸ்டாலினுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவர் தன் தாய் தயாளு அம்மாளிடம்  வேட்பு மனுவைக் காட்டி ஆசீர்வாதங்கள் பெற்றார். இவர்களை அடுத்து தி.மு.க பொதுச் செயலாளர் கே.அன்பழகனிடமும் ஆசீர்வாதம் பெற்றார். அப்போது அன்பழகன், ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

பிறகு திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த தன் தி.மு.க எம்.பியும் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி அண்ணனுக்கு முத்தமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அனைவரது ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துகளுக்குப் பின்னரே ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். தி.மு.க தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத பட்சத்தில் ஸ்டாலினே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.



Trending Articles

Sponsored