`இந்தமுறை 40 தொகுதிகளிலும் இரட்டை இலைதான்!’ - தம்பிதுரை நம்பிக்கைSponsoredநாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என என மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க எம்.பியுமான தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி பகுதியில் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அவர்களிடமிருந்து மனுக்களை பெரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, ``எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுவை உட்பட  40 இடங்களிலும் அ.தி.மு.க மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை முழுமையாக  உள்ளது. சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்தால் ஏற்றுக்கொள்ளுவோம் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளது போன்று, எங்களோடு கூட்டணி அமைக்கும் கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள். முந்தைய தேர்தல்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு உள்ளது’’  என கூறினார். 

Sponsored


2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க, அவற்றில் 38 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட்டன.

Sponsored
Trending Articles

Sponsored