`தீபாவளிக்கு 5 நாள்கள் விடுமுறை!’ - பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை



Sponsored



'தீபாவளிப் பண்டிகையை முழுமையாகக் கொண்டாட 5 நாள்கள் விடுமுறை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 


தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்களுக்கான முதல் மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கே. சுந்தரேசன், காவல் துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டாசுக் கடை உரிமையாளர்களும் வருகைதந்தனர். இந்த மாநாடு, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.இராதாகிருஷ்ணனும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்

Sponsored


வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கே.சுந்தரேசன் பட்டாசு உற்பத்தியின் சட்டங்களையும், விதிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார். சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் பிரச்னைகளின் தீவிரம்குறித்தும் அவர் பேசினார் உரிமம் பெற்ற தொழிற்சாலைகள்மூலம் உற்பத்தியாகும் பட்டாசு எவ்வளவு பாதுகாப்பானது என்பதையும் விளக்கினார். பின்னர், பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏற்ற உறுதிமொழியைப் பின்பற்ற அறிவுரை வழங்கினார், இறுதியாக, அரசு விதித்துள்ள நிபந்தனைகளையும் தெரிவித்தார். அதன்பின், சிவகாசி பட்டாசு சங்க உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். தமிழக அரசு, பிரச்னையில் மிகவும் உறுதுணையாக இருந்ததற்கு,அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

Sponsored


இந்த மாநாட்டில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட 5 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும், பட்டாசுக் கடை உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு மாநிலம் முழுவதும் எளிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பாடுபடும். பட்டாசு வெடிக்கத் தடைகோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுத் தொழிலுக்கு ஆதரவான தீர்ப்பே கிடைக்கும். தீபாவளிப் பண்டிகைக்கு 5 நாள்கள் விடுமுறை அளிப்பதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்’’ என்று பேசினார். இறுதியாக, பட்டாசு மாநாட்டின் முதல் பட்டாசு வணிக மலர் வெளியிடப்பட்டது. இதில், பட்டாசுத் தொழிலின் ஆரம்பமும், வளர்ச்சியும் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது 
 



Trending Articles

Sponsored