``எடப்பாடி பழனிசாமி, தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டணியில் உள்ளார்' - டி.டி.வி தினகரன் சாடல்!Sponsoredதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.கவுடன் மறைமுகக் கூட்டணியில் இருப்பதாக டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், `தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் கூட்டணி என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், தி.மு.க-வுக்கும் பழனிசாமி அன்கோவுக்கும்  அண்டர்கிரவுண்டு கூட்டணி இருக்கிறது. 

Sponsored


Sponsoredஎன்னை, குட்டி எதிரி என்கிறார் அண்ணன் பழனிசாமி. ஆமாம், நான் குட்டிதான். அம்மாவின் குட்டி. இந்த குட்டி 16 அடியில்லை 16 ஆயிரம் அடி பாயும். எங்களைப் பார்த்து பழனிசாமி பயப்படுகிறார். அதனால்தான், எங்கள் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள். விரைவில் இந்த ஆட்சி அகற்றப்படும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இரண்டு தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும்" என்றார்.Trending Articles

Sponsored