`அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் இதற்காகத்தான்!’ - புகழேந்தி ஆரூடம்Sponsored'தமிழகத்தில் கொள்ளையடித்த பணத்தைப் பதுக்கவே அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்' என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்  சாட்டியிருக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``அ.தி.மு.க-வை காப்பாற்ற தமிழகத்தில் நல்ல ஆட்சியை முதல்வர் , துணை முதல்வர் நடத்தவில்லை. கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும்படி எதையும் இவர்கள் செய்யவில்லை. இருவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே கட்சி நடத்திவருகின்றனர். தினகரனால் மட்டுமே அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முடியும். ஈ.பி.எஸ், தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல், அதை நியாயப்படுத்த மோசமான உதாரணங்களைக் கூறுகிறார்.

Sponsored


கரூர் மாவட்டத்தில், மணல் அள்ளுவதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் பங்கு உண்டு. தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து அள்ளினாலும், அதில் அனைத்து அமைச்சர்களுக்கும் தனித்தனியாக பங்கு செல்கிறது . தினகரன் தலைமையிலான  ஆட்சி வந்தவுடன் அனைத்துக்கும் முடிவுகட்டப்படும் . தவறு செய்த அனைவரும் வரிசையாகச் சிக்குவார்கள் .இங்கு கொள்ளை அடிக்கும் பணத்தை வெளிநாட்டில் பதுக்கவே ஜெயக்குமார்  மற்றும் பல அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளார் அ.தி.மு.க-வில்  தற்போது பதவியில் உள்ளவர்களை மக்கள் காமெடியர்களைப் போல பார்க்கிறார்கள்’’ என்றார். மேலும், சில அமைச்சர்களுக்கு பட்டப்பெயர்கள் உள்ளதாகவும், அதைப் பட்டியலிட்டு விமர்சித்தார் புகழேந்தி. .

Sponsored
Trending Articles

Sponsored