பாசனத்துக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியில் தண்ணீர் திறப்பு!Sponsoredகடலூர் மாவட்டத்துக்கு அணைக்கரையில் உள்ள கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கான தண்ணீரை தமிழக  தொழில்துறை அமைச்சர்  எம்.சி.சம்பத் திறந்துவைத்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், ``கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக 26-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வடவார் வாய்க்காலில் விநாடிக்கு 1800 கன அடியும், வடக்குராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடியும்,தெற்குராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 400 கன அடியும் ஆகமொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Sponsored


கடலூர் மாவட்டத்துக்கு நேரடிப் பாசனமாக கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்கால், கான்சாஹிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன்கொல்லை வாய்க்கால் மற்றும் வடவார் வாய்க்கால் பாசனம் உள்ளிட்ட மொத்தம் 47 ஆயிரத்து 997 ஏக்கர் பாசனப்  பரப்புக்கும், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் தெற்குராஜன் வாய்க்கால்,  குமுக்கிமன்னியார் வாய்க்கால்,  மேலராமன் வாய்க்கால் மற்றும் விநாயகன் தெரு வாய்க்கால் வழியாக நேரடிப் பாசனமாக மொத்தம் 39 ஆயிரத்து 50 ஏக்கர் பரப்புக்கும் என  ஆக மொத்தம் 87 ஆயிரத்து 47 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசனவசதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Sponsored


மேலும், `அவ்வப்போது பாசனத் தேவைக்கேற்ப  தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு, வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். தொடர்ந்து  வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு ராதா வாய்க்கால் மதகில் இருந்து விநாடிக்கு 10 கன அடியும்,  வீராணம் ஏரியில் உள்ள இதர 33 மதகுகள் மூலம் விநாடிக்கு 390 கன அடியும், ஆக மொத்தம் விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம், கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் புவனகிரி வட்டங்களைச் சேர்ந்த 102 கிராமங்களில் மொத்தம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்'' என்று தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) விஜயா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், சிறப்பு தலைமைப் பொறியாளர் பாலசுப்ரமணியன், சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசு, உதவி செயற்பொறியாளர்கள் அருணகிரி, குமார், உதவிப் பொறியாளர்கள் வெற்றிவேல், பார்த்திபன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Trending Articles

Sponsored