‘இனி ஒருத்தரும் சாகக் கூடாது!’ - காவிரிப் பாலத்தால் பதறும் திருச்சிSponsoredநாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப் பாலத்தில், செல்ஃபி எடுக்க முயன்றபோது, சிறுவன் தன்வந்த் தவறி ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோன்ற சம்பவங்கள் திருச்சியில் நடந்துவிடக் கூடாது எனப் பதறுகிறார்கள் திருச்சிவாசிகள்.

சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர், காவிரி ஆற்றுப் பாலத்தில் கட்டப்படும் நடைமேடை சீரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்துவந்தார்.  அவர், கடந்த 25-ம்தேதி, திருச்சி காவிரி ஆற்றுப் பால நடைமேடை சிலாப் பணிகளைப் பார்வையிட்டு வந்தபோது, நடைமேடை சிலாப் உடைந்ததில் ஆற்றில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அரவிந்த், பாலத்தின் அருகே  உள்ள ஆகாயத் தாமரைச் செடிகளைப் பிடித்துக்கொண்டதால் உயிர் பிழைத்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அவரை மீட்டனர்.  இது ஒருபுறம் என்றால், கடந்த சில மாதங்களுக்கு முன்,  திருச்சி கீழ் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த 45வயதான லலிதா, தனது மகள் மோனிகா சகிதமாக தனது உறவினர்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு விரதமிருந்து பாதயாத்திரையாக  நடந்துசென்றார். திருச்சி-சென்னை சாலையில் உள்ள பழைய காவிரிப் பாலத்தில் நடந்து செல்லும்போது,  பாலத்தில் ஏற்பட்ட உடைப்பில் கால்வைத்ததில் லலிதா தவறி விழுந்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற  முயன்ற லலிதாவின் மகளும் காயங்களுடன் மீட்கப்பட்டார். இப்படியான சம்பங்களுக்குப் பிறகும் காவிரி ஆற்றின் நடைபாதைகள் சீரமைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உள்ளன.

Sponsoredதற்போது, காவிரியில் அதிக அளவிலான தண்ணீர் வரத்து உள்ளதால், திருச்சி வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குவிகின்றனர். இதனால், காவிரி பாலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், திருச்சி சமூக ஆர்வலர்கள்,  திருச்சி, காவிரிப் பாலத்தில் தண்ணீரை வேடிக்கை பார்க்கச் செல்பவர்கள், குழந்தைகளைப் பாலத்தின் கட்டைச் சுவர் அருகில் நிறுத்தவோ, நடத்திச் செல்லவோ செய்யாதீர்கள். குழந்தைகளின்  பாதுகாப்பு மிக முக்கியம் என அறிவுரை கூறுகின்றனர். குறிப்பாக, பழைய பாலங்களில் நடைபாதை அதிக அளவில் பாதிக்கப்பட்டு பலமில்லாமல் இருப்பதால் ஆபத்து என்றும், திருச்சி புதிய காவிரிப் பாலத்தில் இரண்டாவது கட்டை அருகே  பெரிய ஓட்டை உள்ளது; அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Sponsoredகாவிரிப் பாலத்தின் கைப்பிடிச் சுவர்களை இடித்தும்,  ஏற்கெனவே இருந்த தார்ச் சாலையைப் பெயர்த்துவிட்டு, புதிய சாலை அமைத்திட ரூ.1.79 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி செய்யப்பட்ட பணிகளில் தரமில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கைப்பிடிச் சுவர் மற்றும் சாலைகள் தரமில்லாமல் அமைக்கப்பட்டது அம்பலமானது. இதன் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பாலத்தின் பழைய கைப்பிடிச் சுவரை இடித்துவிட்டு, புதிய சுவர் ரூ.35 லட்சத்தில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியது. அதன்பிறகு பணிகள் நடந்தாலும், முழுமையாகச் சீர்செய்யப்படவில்லை. இந்நிலையில் காவிரியைப் பார்ப்பதற்கு அங்கு பலரும் வருகிறார்கள். பாதிப்புகள் உள்ள பகுதிகளில் ஆய்வுசெய்து பாலங்களைச் சீரமைக்காவிடில், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் திருச்சியில் சமூக ஆர்வலர்கள்.Trending Articles

Sponsored