மின்னல் வேகத்தில் சென்ற ஆம்னி பஸ்... பைக்கிலிருந்து தூக்கிவீசப்பட்ட நண்பர்களுக்கு நடந்த துயரம்!Sponsoredபுதுக்கோட்டை அருகே பைக் மீது ஆம்னி பேருந்து மோதியதில், நண்பர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி மணப்பாறையை அடுத்த ரெட்டியபட்டியைச் சேர்ந்த விமல் ராஜ் என்பவர், தனது நண்பர்கள் 3 பேருடன் இன்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அவர்கள், விராலிமலை அருகே உள்ள லஞ்சம்மேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த ஆம்னி பேருந்து அதிவேகமாக மோதியதில், விமல்ராஜ் உள்ளிட்ட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கீழே விழுந்த விமல்ராஜின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, விராலிமலை போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.
 
இந்த விபத்தில் பலியான நான்கு பேரும் ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் ராஜசேகர், குணசேகர், விமல்ராஜ், அருண் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் நண்பர்கள் நான்குபேர் பலியான சம்பவம் விராலிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored