டி.டி.வி.தினகரன் இனிஷியலுக்குப் புது விளக்கம் அளித்து அதிரவைத்த புகழேந்தி!Sponsoredஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக மாநில அ.ம.மு.க பொறுப்பாளர் புகழேந்தி, தினகரனின் இனிஷியலான டி.டி.வி-க்கு புது விளக்கம்கொடுத்து அதிரவைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், மேற்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா என்ற பெயரில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்திருந்தனர். ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்களை அழைத்துவந்திருந்தனர். கூட்டம் தொடங்கியது முதல் பேசிய ஒவ்வொரு பேச்சாளரும் காவல்துறையை வறுத்தெடுத்தனர். உச்சக்கட்டமாக சேலஞ்சர் துரை என்பவர், ‘‘எங்கள் தொண்டர்களைத் தடுத்து நிறுத்தும் காவல்துறை அதிகாரிகளே, ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து எங்கள் ஆட்சிதான் தமிழகத்தில் வரப்போகிறது. அப்போது உங்கள் நிலையை எண்ணிப்பாருங்கள்’’ எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை ஒருமையில் திட்டித்தீர்த்தார். உச்சக்கட்டமாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அநாகரிகமான வார்த்தைகளால் அர்ச்சனைசெய்தார். பேசிய ஒவ்வொருவரும் தொண்டர்களை உசுப்பேற்றிக்கொண்டிருந்தார்கள். கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி பேசும்போது, ``நாளுக்கு நாள் அ.ம.மு.க-வுக்கான மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டேயிருக்கிறது. இதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வரப்போகும் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தான் மாபெரும் வெற்றிபெறப்போகிறார். அவரது பெயரில் இருக்கும் ஒரு `டி', திருப்பரங்குன்றம், இன்னொரு `டி' திருவாரூர். `வி' ன்னா வெற்றி. இப்ப புரியுதா நாங்க பேர்லயே ரிசல்ட்டை வெச்சிருக்கோம்'' என இனிஷியலுக்குப் புது விளக்கம்கொடுத்தார்.

Sponsored


Sponsored


தங்க தமிழ்செல்வன் பேச வரும்போது, தொண்டர்கள் மத்தியில் ஆரவாரம் அதிகமாக இருந்தது. ஆர்வம் மிகுதியில் சிலர், பூக்களைத் தூவினர். ‘‘ஒன்றரை வருஷமா மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பதினெட்டு தொகுதிகளோட மக்கள் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அதுக்காகவாவது தீர்ப்பை சீக்கிரம் சொல்லணும். இந்த ஆட்சியோட நாள்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனி மனிதனாக, சுயேச்சையாகக் களமிறங்கி வெற்றிபெற்றார் டி.டி.வி.தினகரன். இப்போது இந்த மேடையில் வைத்து சவால்விடுகிறேன். உங்ககிட்ட ஆள் பலம், ஆட்சி பலம், பண பலம் எல்லாமே இருக்கு. சரியான ஆம்பளைனா திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்ல நின்னு ஜெயிச்சுப் பாருங்க. அரசியல்ரீதியாக அ.ம.மு.க சந்திக்கும் முதல் தேர்தல் இது. எங்களுக்கு என்ன சின்னம் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். எங்களை ஜெயிச்சுப் பாருங்க பார்க்கலாம். இதை நான் உசுப்பேத்துறதுக்காகச் சொல்லலை. உண்மையிலேயே மக்கள் ஆதரவு அ.ம.மு.க-வுக்கு அதிகமாயிருக்கு. அதை வெச்சுதான் சொல்றேன்’’ என்றார்.Trending Articles

Sponsored