மேட்டூர் அணை வியூவ் பாயின்டில் சுற்றுலாப் பயணிகள்! - தடையைத் தாண்ட உதவிய போலீஸ்Sponsoredமேட்டூர் அணையின் நடுப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தினர் காவல்துறையினரின் உதவியுடன் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஊரே கொண்டாடும் வண்ணம் உள்ளன. அணையில் நீர்வரத்தை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க பல இடங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் சுற்றிலும் இருந்தனர். அங்கு வியூவ் பாயின்ட் என்னும் அணை உடன் ஒன்றிய இடத்தில் அதாவது சற்று தூரத்தில் இருந்து பார்க்க அனுமதி உண்டு. 


அணையின் மேல் பயணம் செய்யவோ, அங்கு சென்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை. அந்த வியூவ் பாயின்ட் என்னும் இடம் நான்காவது மாடியில் உள்ளது. அங்கு சென்று பார்க்க லிஃப்ட் மற்றும் படிக்கட்டுகள் உள்ளன. அதற்கு ரூபாய் 20 மற்றும் 5 கட்டணம். சரிபார்க்கும் வேலை நடைபெற்று வருவதால் லிஃப்ட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி அங்கு பாதுகாப்பாளர்கள் உதவியுடன் சுற்றுலாப் பயணிகள் சிலர் தடையை மீறி அணையின் மீது அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பணியில் இருந்த ஒரு பெண் காவலர் அந்த சிலரை உள்ளே அனுமதித்துவிட்டுச் சென்றார். அங்கு கண்காணிப்புப் பணியில் இருந்த யாரும் இதை தடுக்கவில்லை. மாறாக அவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 

Sponsored


இதைக் கவனித்த அனைவருக்கும் பல எண்ணங்கள் தோன்றி இருக்கும். சிலர் அவர்களைபோல் அங்கு செல்ல நினைத்து இருக்கலாம். சிலர் அது தவறு என நினைத்திருக்கலாம். ஆனால், அணையின் மேல் சென்றவர்களுக்கு ஏதேனும் நடந்திருந்தால் அது அந்த குடும்பத்துக்கும் அங்கு இருந்த பணியாளர்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பு தான். 

Sponsored


அணை அருகில் 4 சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது. ஆனால், சில சுற்றுலாப் பயணிகள், அங்கு வாகனத்தை காவல்துறை உதவியுடன் நிறுத்துகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Trending Articles

Sponsored