டிராக்டரைக் கடத்திய பா.ஜ.க முன்னாள் மா.செ! - நீதிமன்றத்தில் நிவாரணம் தேடிய விவசாயிSponsoredவிவசாயி ஒருவரின் டிராக்டரை கடத்திய சம்பவத்தில் கைதாகியிருக்கிறார் பா.ஜ.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான தனசேகர். 

கரூர் மாவட்டம், கருப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் தனசேகர். வழக்கறிஞரான இவர், பா.ஜ.க-வின் கரூர் மாவட்ட முன்னாள் செயலாளராக இருந்தவர். `இவரது நடவடிக்கை சரியில்லை' என அண்மையில்தான் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினர். இதனால், வழக்கறிஞராக மட்டும் பணி செய்து வந்தார். இதில், பரமத்தி ஒன்றியத்தில் உள்ள குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்ற விவசாயிக்கும் தனசேகருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதனால், பொன்னுசாமியை அடிக்கடி மிரட்டி வந்தாராம் தனசேகர். இந்த நிலையில், விவசாய வேலைகளுக்காக வங்கியில் கடன் வாங்கி ஒரு டிராக்டரை வாங்கி அதை தனது சகோதரி மகன் பெரியசாமி வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார் பொன்னுசாமி. வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த டிராக்டர் திடீரென காணாமல் போகவே, பதறியடித்துப் போய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Sponsored


இந்தச் சூழலில், ` டிராக்டரை கடத்தியது தனசேகர்தான். அந்த வாகனத்தை லந்தக்கோட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார்' என பொன்னுசாமிக்குத் தெரிய வர, அதைப் பற்றி க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் தகவல் சொல்லி இருக்கிறார். அதன் பிறகும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொன்னுசாமி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடவே, தனசேகரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீஸார். 

Sponsored
Trending Articles

Sponsored