ஓ.பி.எஸ்ஸைத் தொடர்ந்து இன்று முதல்வரை சந்தித்துப் பேசுகிறார் மதுசூதனன் - முக்கிய முடிவுக்கு வாய்ப்பு!Sponsoredஅ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று சந்தித்துப் பேசிய நிலையில், இன்று   முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசுகிறார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் மதுசூதனன். கட்சியின் அவைத்தலைவராகவும், மூத்த தலைவராகவும் இருந்துவருகிறார். இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு, கட்சியில் மதுசூதனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுவந்தது. இதன் ஒருபகுதியாக, சமீபத்தில் நடந்த ராயபுரம் கூட்டுறவு சங்கத் தேர்தலில், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இதற்கு, அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்களே காரணம் என்று கூறப்பட்டது.

Sponsored


இதன்காரணமாக, இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், நேற்று இது தொடர்பாக அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் மதுசூதனன். இந்த சந்திப்புக்குப் பின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், அமைச்சர் மீதான தனது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையிலும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்க உள்ளார் மதுசூதனன், அப்போது, முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும், சந்திப்பின் முடிவில்  பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்  என்றும் தெரிகிறது.

Sponsored
Trending Articles

Sponsored