தி.மு.க தலைவரானார் ஸ்டாலின்! #LiveUpdates



*  தி.மு.க தலைவராக அறிவிக்கப்பட்ட பின் அண்ணா, கருணாநிதி ஆகியோர் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

*  தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. தி.மு.க தலைவராக முறைப்படி பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.

Sponsored


*  கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த 248 பேரின் குடும்பத்திற்கும் இரங்கல் மற்றும் தலா 2 லட்சம் வழங்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. 

Sponsored


*  மறைந்த ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னானுக்கு தி.மு.க பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது . கேரள வெள்ளம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆகியவற்றில் இறந்தவர்களுக்கும், திமுக உறுப்பினர்களின் இறப்புக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. 

Sponsored


* திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கருணாநிதி, வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

* சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

* சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார் மு.க.ஸ்டாலின். துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரும் அண்ணாஅறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

* சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள தி.மு.க பொதுக்குழுவில் பங்கேற்க க.அன்பழகன் வருகை.

* தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின். கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அறிவாலயம் செல்வதற்கு முன் தாயார் தயாளு அம்மாளிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார்.

* தி.மு.க பொதுக்குழு கூட்டம்  ஸ்டாலின் தலைமையில் தொடங்குகிறது. திமுக தலைவராக ஸ்டாலின் பெயர் இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறது.பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பொதுக்குழு உறுப்பினர்களும், 700 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட மொத்தம் 5000 பேர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறு. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.


உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி, சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். இதையடுத்து, தி.மு.க தலைவர் பதவி காலியானதால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, தி.மு.க தலைவர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், காலியாக உள்ள தி.மு.க தலைவர் பதவிக்கு, மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்செய்தார். அதேபோல, பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல்செய்தார். மேற்கண்ட பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய முன்வராததால், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று நடைபெறும் பொதுக்குழுவில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.


 



Trending Articles

Sponsored