புதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு விமான சேவை துவக்கம்Sponsoredபுதுச்சேரியில் இருந்து தாய்லாந்துக்கு, வரும் அக்டோபர் மாதம் முதல் விமான சேவை துவக்கப்பட இருக்கிறது.

தற்போது, புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் (Spice jet) நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்துவருகிறது. அதேபோல, சென்னை மற்றும் சேலத்துக்கு, தினசரி விமான சேவையைத் தொடங்குவதற்கான வேலைகளில் ஏர் ஒடிஷா (Air Odisha) நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Sponsored


தற்போது, புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங் நகருக்கான முதல் வெளிநாட்டு விமான சேவையைத் தொடங்க உள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சேவைக்கான முன்பதிவையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது தொடங்கிவிட்டது. புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து காலை 11.45 மணிக்கு புறப்படும் அந்த விமானம், ஹைதராபாத் வழியாக இரவு 9.40 மணிக்கு பேங்காங் நகருக்குச் சென்றடையும். அதேபோல, இரவு 10.40 மணிக்கு பேங்காங் நகரிலிருந்து புறப்படும் விமானம், ஹைதராபாத் வழியாக மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். இதற்கான கட்டணம் 14,429 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored