23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் கள்ளிக்காட்டு இதிகாசம் – கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி!Sponsoredகடந்த 2013ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல், 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவருவதாக அதை எழுதிய கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ”கள்ளிக்காட்டிற்கு மீண்டும் ஒரு கெளரவம் பிறந்திருக்கிறது. மண்ணின் மக்களுக்கு மீண்டும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசத்தை சாகித்ய அகாடமி, ’நாகபாணி வன்கா இதிகாஷ்’ என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்த்தது. கடந்த ஆண்டு வெளிவந்த அந்த நாவலுக்கு,  'இந்தியில் வெளியான சிறந்த நூல்' என்ற விருது கிடைத்திருக்கிறது. இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு இந்த விருதை வழங்கியிருக்கிறது. இம்மண்ணுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Sponsored


Sponsored


மேலும், `` 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல், கடந்த 16 ஆண்டுகளில் 32 பதிப்பு கண்டிருக்கிறது. தற்போது, இந்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகத் தயாராக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட 23 இந்திய மொழிகளில் கள்ளிக்காட்டு இதிகாசம் மொழிபெயர்க்கப்படும்" என்றார்.

மண் சார்ந்த மாந்தர்களையும், அவர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வார்த்தைகள் நிறைந்த கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை, மொழிபெயர்ப்பது சவாலாக இருந்திருக்குமே, என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ”உண்மைதான். நாம் இங்கே பயன்படுத்தும் சாதாரண பொருள்களில் ஆரம்பித்து, பேச்சுவழக்கு வரை அனைத்தையும் மொழிபெயர்ப்பது சவாலாகவே இருந்தது. இந்தியில் மொழிபெயர்த்தவர் டெல்லியைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் பாலசுப்பிரமணியம். இவர் உட்பட, மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் என்னுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்கள். சிறு சந்தேகம் என்றாலும் உடனே போன் செய்து கேட்டுவிடுவார்கள்” என்றார்.Trending Articles

Sponsored