தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்Sponsoredதமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில், இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடதமிழகப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாகவும்,வெப்பச்சலனம் காரணமாகவும்  தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில், இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. அதேபோல, தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தலா 8செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 5செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் 100-க்கும் அதிகமான பகுதிகளில் தலா 2 மற்றும் 1செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை அல்லது இரவில், இடியுடன்கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது, அதிகபட்சமாக 34டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையும் இருக்கும்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored