உயிரைப் பறித்த நடிகையின் நட்பு... கொடைக்கானலில் கொல்லப்பட்ட டிரைவர்!கொடைக்கானலில் ரத்தக்கறை படிந்த நிலையில் ஒரு கார் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காரை கைப்பற்றிய காவல்துறையினர், கொலை நடந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைத் தெரிந்துகொண்டனர். தொடர் விசாரணையில் இரண்டே நாளில் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்துள்ளனர், காவல்துறையினர்.

Sponsored


இந்தத் துரித நடவடிக்கையால், கொடைக்கானல் டிஎஸ்பி பொன்னுச்சாமி மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான காவல் துறையினர், பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், ``இது, தவறான நட்பால் நடந்த கொலை. மூன்றரை லட்ச ரூபாய்க்காகக் கொலை செஞ்சிருக்காங்க. ரத்தக்கறை படிஞ்ச காரை மட்டும் வெச்சுக்கிட்டு விசாரணையை ஆரம்பிச்சோம். அப்போது, கொலையான ஆள்கூட யாருன்னு தெரியாது. இந்த வழக்கில் தொடர்புடையவரைப் பிடிக்க செல்போன்தான் உதவியா இருந்திச்சு’’ என்றவர்கள்...

``கொடைக்கானல் அட்டுவம்பட்டியைச் சேர்ந்தவர், பிரபாகரன். வாடகைக் கார் ஓட்டுறதுதான் வேலை. இந்த நிலையில, குறிஞ்சி ஆண்டவர் கோயில் பக்கத்துல குடியிருக்கிற விஷ்ணுபிரியாங்கிற பொண்ணுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொண்ணு 'மாயாவி' படத்துல மாற்றுத்திறனாளியா நடிச்சிருக்கு. இந்தம்மாவோட கணவர் ரமேஷ்கிருஷ்ணா. இவங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கு. இந்தம்மாவோட அப்பா சூரியநாராயணன், ஹைதராபாத்துல இருக்காரு. அப்பாவைப் பார்க்க அடிக்கடி இந்தம்மா ஹைதராபாத் போவாங்க போலிருக்கு. அப்போது, மதுரை ஏர்போர்ட்ல டிராப் பண்றது, பிக்கப் பண்றதெல்லாம் பிரபாகரனோட வேலை. வாடகைக் கார் டிரைவரா அறிமுகமான பிரபாகரனுக்கும் அந்தம்மாவுக்கும் நெருக்கமான நட்பு உண்டாகிடுச்சு. ரெண்டு பேரும் அடிக்கடி ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்குவாங்களாம். இது, பொண்ணோட அப்பாவுக்கு தெரிஞ்சுபோச்சு. அவரும் பல தடவை எச்சரிக்கை பண்ணியிருக்காரு. ஆனா, இவங்க அதை கண்டுக்காம தொடர்ந்து நெருக்கமா பழகி இருந்திருக்காங்க.

Sponsored


Sponsored


இதனால ஆத்திரமடைஞ்ச சூரியநாராயணன், பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவுபண்ணியிருக்காரு. அதுக்காக கொடைக்கானலைச் சேர்ந்த செந்தில்கிட்ட பேசியிருக்காரு. மூன்றரை லட்ச ரூபாயும், 13 சென்ட் இடமும் பேரமா பேசியிருக்காங்க. அட்வான்ஸ் பணமா 50 ஆயிரத்தை செந்தில் அக்கவுன்ட்டல போட்டுருக்காங்க. அட்வான்ஸ் வந்ததும், செந்தில் தன்னோட நண்பர்கள் மணிகண்டன், முகமது சல்மான் ரெண்டு பேரையும் சேர்த்துக்கிட்டு காரியத்துல இறங்கியிருக்கார். வாடகைக்கு வண்டி வேணும்னு பிரபாகரனை கூப்பிட்டிருக்காங்க. அவரும் வாடகைக்கு போயிருக்கார். போற வழியில பிரபாகரன் முகத்துல துண்டைப்போட்டு கழுத்தை அறுத்து கொன்னுட்டாங்க. பாடியைச் சிட்டி டவர் பகுதியில பள்ளத்துல தூக்கிப்போட்டுட்டு போயிட்டாங்க. பிரபாகரனோட போனையும் அவன் பாக்கெட்லயே வெச்சு தூக்கிப் போட்டுட்டாங்க.

இந்த நிலையில, ரத்தக்கறை படிஞ்ச கார் யாருதுன்னு விசாரிச்சு, பிரபாகரன் வீட்டுல விசாரிச்சோம். ஆள் காணோம்னு சொன்னாங்க. சந்தேகப்பட்டு, அவர் நம்பருக்கு போன் பண்ணுனா போனை எடுக்கலை. செல்போன் சிக்னலை வெச்சு இடத்தைப் பார்த்தப்ப, சிட்டி டவர் பள்ளத்தைக் காட்டுச்சு. அப்புறம் பாடியைத் தேடி எடுத்தோம். அவன் செல்போனை வெச்சு, கடைசியா பேசுனவங்க லிஸ்ட் எடுத்து சந்தேகத்தின் பேர்ல செந்தில், மணி, முகமது சல்பான், இர்பான் ஆகியோரைக் கைதுசெஞ்சோம்'' என்றனர்.

 கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படும் சூரியநாராயணனைக் கைதுசெய்வதற்காக கொடைக்கானல் காவல்துறை ஹைதராபாத் விரைந்துள்ளனர். நடிகையின் நண்பர் கொலை விவகாரம், கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored