சென்னையில் ஐ.டி நிறுவனத்தை அதிரவைத்த வருமானவரி அதிகாரிகள்!Sponsoredசென்னை, தேனாம்பேட்டை அண்ணாசாலையில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று கீழ்தளத்தில் செயல்படுகிறது. முதல் மாடியில் ஐ.டி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ளன. மும்பையைத்  தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் குறித்த முக்கியத் தகவல் வருமானவரித் துறையினருக்குக் கிடைத்தது. அதை ஆய்வு செய்த வருமானவரித் துறையில் சம்பந்தப்பட்ட ஐ.டி நிறுவனத்தில் சோதனை நடத்த முடிவு செய்தனர். 

Sponsored


இதற்கென தனி டீம் உருவாக்கப்பட்டது. அதிகாரிகள், இன்று அண்ணாசாலையில் உள்ள ஐ.டி நிறுவனத்துக்குள் நுழைந்தனர். அப்போது, பணியில் இருந்த ஊழியர்களிடம் விவரத்தைத் தெரிவித்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அனைத்துத் தொலைத்தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டு, ஒவ்வொரு அறையாக சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். 
 
ஐ.டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமானவரித் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``சோதனை நடத்தும் மென்பொருள் நிறுவனத்தின், இந்தியாவின் தலைமையிடம் மும்பை. மும்பையில் மட்டும் இரண்டு அலுவலகங்கள் உள்ளன. அதுதவிர சென்னை தேனாம்பேட்டையில் ஒரு அலுவலகம் உள்ளது. சோதனை நடந்துகொண்டிருப்பதால் எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியாது. நீண்ட காலமாகக் கண்காணித்து இந்தச் சோதனை நடத்த முடிவு செய்தோம். சம்பந்தப்பட்ட ஐ.டி நிறுவனத்தில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

Sponsored


கடந்த நிதியாண்டின் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு தினங்கள் காலஅவகாசம் உள்ள நிலையில் ஐ.டி நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்துவருகிறது. இதனால், சம்பந்தப்பட்ட ஐ.டி. நிறுவனம் தாக்கல் செய்த வருமானவரி அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படலாம் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். Trending Articles

Sponsored