`ஸ்டாலின் முத்திரை பதிக்க வேண்டும்!' - வாழ்த்தும் ராமதாஸ்Sponsoredதி.மு.க தலைவர், பொருளாளராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், துரைமுருகனுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க-வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர், சென்னையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்கள் இருவருக்கும் பா.ம.க சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Sponsored


தி.மு.க-வுக்குள் இருவரின் பணிகளையும், உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞரணி அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட  வகித்து, இப்போது தலைவராக ஸ்டாலின் உயர்ந்திருக்கிறார்.

Sponsored


அதேபோல, துரைமுருகனும் மாணவரணிச்  செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறமையை மெய்ப்பித்துவிட்டு, பொருளாளர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஏற்றுக்கொண்ட புதிய பதவிகளில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரும் முத்திரை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.Trending Articles

Sponsored