``என்னை வில்லன் என்று சொன்ன அமைச்சர் முகத்தைப் பாருங்கள் உண்மை புரியும்'' - டி.டி.வி.தினகரன்!Sponsoredசிவகங்கை மாவட்டம் காரைக்குடி, பாகனேரி, சிங்கம்புணரி, தேவகோட்டை என  கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயாளர் டி.டி.வி தினகரன்.  

தேவகோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எப்போது தேர்தல் வந்தாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். தி.மு.க-வுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது. அதே நேரத்தில், தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி சொல்ல முடியும். வில்லன் என்று கூறிய அமைச்சர் முகத்தையும் என்  முகத்தையும் போட்டோ எடுத்து சேர்த்து வைத்துப் பாருங்கள், அப்போது தெரியும் யார் வில்லன் என்று. மேலும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும் எங்களிடம் வருவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் யாரும் தன்னிடம்  பேச்சுவார்த்தைக்கு வர மாட்டார்கள். அவர்கள் எல்லாம் கழகப் பொதுச் செயளாளருக்கும், கட்சிக்கும், மக்களும் துரோகம் செய்தவர்கள். வருகின்ற 2019 பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும். அதில், ஆட்சியில் இருப்பவர்கள் டெப்பாசிட் இழப்பார்கள். எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும், ஆர்.கே.நகர் தேர்தல் நிலைமைதான் ஆளும் கட்சிக்கு வரும். 18 எம்.எல்.ஏ-க்களின் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored