``நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறோம்'' - கமல் பேட்டி!Sponsored'அடுத்த ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறோம்' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் எனவும் அவர் கூறினார்.


நடிகர் கமல்ஹாசன், `மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியைத் துவக்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ளார். கட்சியைப் பலப்படுத்தும் பல்வேறு செயல்களை அவர் மேற்கொண்டுவருகிறார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,``அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக்கொண்டிருக்கிறது. சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டவேண்டிய வேலையில் ஈடுபடுவோம். எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை. மேலும், தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored