திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும்.

Sponsored


முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா, இன்று (30.08.18) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று (29.08.18) மாலையில் வடக்குரத வீதியில் உள்ள சிதம்பர தாண்டவ விநாயகர் சந்நிதியில் இருந்து யானை மீது கொடிப்பட்டம், ரத வீதிகளில் உலாவாக  எடுத்துவரப்பட்டது.

Sponsored


Sponsored


கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம். அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள செப்புக்கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனை நடைபெற்றது. இன்று தொடங்கி, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  5-ம் நாளான வரும்செப்டம்பர் 3-ம் தேதி, இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7-ம் நாள் திருவிழாவான, 5-ம் தேதி காலை5.30 மணிக்கு, சுவாமி ஆறுமுகநயினார்உருகுசட்ட சேவையும், 9-மணிக்கு சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி அலங்காரத்திலும் எழுந்தருளி வீதியுலாவருதலும் நடைபெறுகிறது.

8-ம் நாள் திருவிழாவான வரும் 6-ம் தேதிகாலை 5 மணிக்கு, சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச்சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அலங்காரத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்,     வரும் 8-ம் தேதி   காலை 6 மணிக்கு நடைபெறும். 12-ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 10-ம் தேதியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில், தினமும் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறும்.



Trending Articles

Sponsored