ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 200 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் தடை!Sponsoredபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேட்டைப் போலவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teacher Elegibility Test) முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 200 ஆசிரியர்களையும்  கண்டறிந்து, இனி இவர்கள், எந்தத் தேர்வும் எழுத முடியாத அளவுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது, ஆசிரியர் தேர்வு வாரியம் (Teacher Recuritment Board). 

கடந்த ஆண்டு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்தத் தேர்வில், பலரும் பணம் கொடுத்து விடைத்தாளில் திருத்தம்செய்து மதிப்பெண் பெற்றது கண்டறியப்பட்டது. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றியவர்கள் 10 பேருக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலும், இந்த முறைகேடு, ‘டேட்டாடெக் மெத்தோடெக்’ என்ற தனியார் நிறுவனத்தின்மூலம் விடைத்தாளை ஸ்கேன் செய்யும்போது நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த நிறுவனமே, கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாளையும் ஸ்கேன் செய்யும் பணியைச் செய்திருந்தது.

Sponsored


இதனால், ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதுகுறித்து தேர்வு வாரியத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதிலும், 200 பேர் முறைகேடுசெய்து, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளனர்  என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ஸ்கேன் செய்த நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 200 ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்யவும், வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தடையும் விதித்துள்ளது, ஆசிரியர் தேர்வு வாரியம். 

Sponsored
Trending Articles

Sponsored