ஸ்டெர்லைட் விவகாரம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்குத் தடை கோரி தமிழக அரசு வழக்கு



Sponsored



ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்துவரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது, இது தொடர்பாகத் தமிழக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, ``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூறி வேதாந்தா தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும்  மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, வேதாந்தா குழுமம் தொடுத்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தது.

மேலும், `ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் உற்பத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளக் கூடாது என்றும் இந்த மனு தொடர்பாக 10 நாள்களுக்குள் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டது. 

Sponsored


இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், `ஸ்டெர்லைட் ஆலையில் முறையான ஆய்வு நடத்தியபிறகே ஆலை மூடப்பட்டது. விசாரணை ஆணையம் அமைக்கத் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை. இதனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Sponsored




Trending Articles

Sponsored