யார் இந்த இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர்? - ஒரு கையில் பதவி உயர்வு ஆர்டர்; மறுகையில் அதிர்ச்சி ஆர்டர்Sponsored 

திருவேற்காடு நர்ஸ் ரேணுகா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டருக்கு சமீபத்தில்தான் பதவு உயர்வு கிடைத்துள்ளது. 

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர், கடைகளுக்கு சிப்ஸ், தின்பண்டங்களை சப்ளை செய்துவருகிறார். இவரின் முதல் மனைவி வசந்தா. அவர் இறந்தபிறகு வசந்தாவின் தங்கை ரேணுகாவை திருமணம் செய்துகொண்டார். ரேணுகா, நர்ஸாகப் பணியாற்றினார். ரேணுகாவுக்கும் அவரின் வீட்டின் அருகே குடியிருக்கும் அமிர்தவள்ளி என்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. முதலில் வீட்டில் படி கட்டியது, அதன்பிறகு கழிவறை கட்டியது எனத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் பிரச்னை வந்துள்ளது. அமிர்தவள்ளி, திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் ரேணுகா மீது புகார் கொடுத்தார். அந்தப் புகாரை இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர் விசாரித்தார். விசாரணையின்போது நடந்த சம்பவங்களால் மனம் உடைந்த ரேணுகா, போலீஸ் நிலைய வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.  இந்தச் சம்பவத்தையடுத்து, இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Sponsored


இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர் குறித்து விசாரித்தபோது பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.  ``இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். நசரேத்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பணியாற்றினார். அப்போதும் அவர் மீது சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அங்கிருந்துதான் திருவேற்காடு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரின் அதிரடி நடவடிக்கைகளால் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகூட காலதாமதமாகத்தான் கிடைத்தது. சமீபத்தில் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களுக்கான பதவி உயர்வுப் பட்டியலில்தான் அலெக்ஸாண்டரின் பெயரும் இருந்தது. இதனால், பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியில் அவர் இருந்தார். இந்தச் சமயத்தில்தான் நர்ஸ் ரேணுகா விவகாரத்தால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்றனர். 

Sponsored


நர்ஸ் ரேணுகா, இறப்பதற்குமுன் இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் புகார் கொடுத்த பெண்ணுக்கு உதவிய அ.தி.மு.க. பிரமுகர்களின் பெயர்களை குறிப்பிட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் இப்படி காவல்துறையினர் நடப்பதாக ரேணுகா குறிப்பிடுகிறார். அவரின் மரண வாக்குமூலம் அடிப்படையிலேயே விசாரணை நடத்தினால், பல உண்மை வெளியில் வரும். இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டரும், சப்-இன்ஸ்பெக்டர் சரவணனும் விசாரணை என்ற பெயரில் தன்னுடைய மனைவியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக ரேணுகாவின் கணவர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், மதுரவாயல் போக்குவரத்து பிரிவிலிருந்து திருவேற்காடு காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர். இன்ஸ்பெக்டரின் உத்தரவின்பேரில்தான் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ரேணுகாவின் தரப்பு நியாயத்தை போலீஸார் கேட்கவில்லை என்று அவரின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவர் தீக்குளித்தபோதுகூட அதைத் தடுக்க யாரும் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டையும் உறவினர்கள் முன்வைத்துள்ளனர். 

தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பல வெளியில் தெரிவதில்லை. நர்ஸ் ரேணுகா தற்கொலை செய்துகொண்டதால், அந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. காவல் நிலையத்துக்குள் நடந்ததை ரேணுகா தரப்பினர் செல்போனில் பதிவு செய்ததால் மட்டுமே இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் இந்தச் சம்பவமும் மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 

 ரேணுகாவின் விவகாரத்தில், அ.தி.மு.க. பிரமுகர்களின் தலையீடு அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ``திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மூலம், நகரச் செயலாளர் வழியாகத்தான் பேரம் பேசப்பட்டுள்ளது. அதில் முன்னாள் நகர்மன்றத் தலைவர், கவுன்சிலர் ஆகியோர்தான் காவல் நிலையத்தில் பேரத்தைப் பேசி முடித்துள்ளனர். தற்போது ரேணுகா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க-வினர் கலக்கத்தில் இருக்கின்றனர். முழுமையாகவும் நேர்மையாகவும் விசாரித்தால் மட்டுமே ரேணுகாவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்" என்றனர். Trending Articles

Sponsored