`போன் செய்தால் வீட்டுக்கே பணம் வந்துவிடும்' - செப். 1 முதல் அஞ்சல் வங்கித் திட்டம் தொடக்கம்!போன் செய்தால் வீட்டுக்கே பணம் கொண்டுவந்து கொடுக்கும் வங்கித் திட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

Sponsored


கன்னியாகுமரி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், ``அனைத்து அஞ்சலகங்களிலும் இந்தியன் போஸ்டல் பேமென்ட் பேங்க் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 5 அஞ்சலகங்களில் வங்கித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாகர்கோவிலில் நடக்கும் அஞ்சலக வங்கித் திட்டத்தின் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கிறார்.

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு தொடங்க ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண் மட்டும் போதுமானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 267 கிளைகளிலும் வரும் 3 மாதத்துக்குள் வங்கித் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் போன் செய்தால் வீட்டுக்கே பணம் கொண்டுவந்து கொடுக்கப்படும். அதற்காக 25 ரூபாய் சார்ஜ் செய்யப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்வமகள் சேமிப்புத்திட்டத்தில் 51,000 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்மூலம் 114 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் பாஸ்போட் சேவா கேந்திரம் தொடங்கப்பட்டு 5000 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored