பாடியூர் மண்மேட்டில்ஆகழ்வாராய்ச்சி - மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!Sponsoredபாடியூர் மண்மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் மத்திய தொல்லியல் துறை இயக்குநர், மாநிலத் தொல்லியல்துறை ஆணையர், திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாரயணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது பாடியூர். இந்தக் கிராமத்தில் மிகப் பழைமையான மணல் மேட்டில் மண் பாண்டங்கள், சுடுமண் பொம்மைகள், முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள் உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. ஆனால், முதல் 4 ஏக்கர் வரை உள்ள இந்த மணல் மேட்டை தகர்த்து அரசு மேல்நிலைப்பள்ளி அங்கு கட்டப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் பழமையான இடத்தை தகர்த்தி கட்டடம் கட்டியுள்ளது வேதனைக்குறியது. தற்போது 1 ஏக்கர் மண் மேடை மட்டுமே எஞ்சியுள்ளது. ஆகையால், இந்த மண் மேட்டை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்று சான்றிதழ் கிடைக்கும். எனவே, இந்தப் பகுதியில் மத்திய, மாநில அரசுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தனது பொதுநல மனுவில் கூறியிருந்தார்.

Sponsored


இந்த மனுவை விசாரித்த உயர நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தீரேஷ், சதீஷ்குமார் அமர்வு இது குறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குநர், மாநிலத் தொல்லியல் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு  3 வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்து உத்திரவிட்டனர்.

Sponsored
Trending Articles

Sponsored