சோலார், காற்று மின் உற்பத்தியில் உலக அளவில் முன்னேறும் இந்திய மாநிலம்!Sponsoredடந்த சில ஆண்டுகளுக்கு முன், மின்சார உற்பத்தியில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருந்தது தமிழ்நாடு. ஆனால், தற்போது உலக அளவில், சீனாவில் உள்ள சில மாகாணங்கள் மற்றும் அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணம் ஆகியவற்றுக்குப் பிறகு, காற்றாலைகள் மற்றும் சோலார் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறியுள்ளது தமிழ்நாடு. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை மட்டும் 1,349.64 GWH (Gigawatt Hour) மின் உற்பத்தி செய்துள்ளது தமிழ்நாடு. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் செய்த மின் உற்பத்தியைவிட 326% அதிகபட்சமாகும்.

காற்று மூலம் வெளியேற்றப்படும் மின்சாரமானது கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைவானதாகவே இருந்தது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை காற்றின் மூலம் 5,790 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தியானது. இதே காலகட்டத்தில் 2017-ம் ஆண்டு 9,133 மில்லியன் யூனிட்களும் 2016-ம் ஆண்டு 8440 மில்லியன் யூனிட்களும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்கிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம். காற்று மூலம் மின் உற்பத்தி செய்யும் இடங்களில், அதிக அளவிலான மழை பெய்ததே இதற்குக் காரணம். அதேநேரத்தில், அதிக மழையின் காரணமான தண்ணீர் மூலம் எடுக்கப்படும் மின்சாரத்தின் அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது.

Sponsored


தமிழ்நாட்டில் 8,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் அளவு காற்றாலைகள் உள்ளன. ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை காற்று மூலம் அதிக அளவிலான மின் உற்பத்தி செய்யப்படும். 2017-ம் ஆண்டு, ஒரு நாளில் அதிக அளவாக, 5,093 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த வருடம் 5,000 மெகா வாட் என்ற அளவைக்கூடத் தொடவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காற்றின் மூலம் எடுக்கப்படும் மின்சாரம் ஏப்ரல் மாதமே தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் வந்த காற்றின் அளவே மிகக் குறைவாக இருந்தது. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம். திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில்தான் அதிக காற்றாலைகள் இருக்கின்றன. அந்தப் பகுதிகளில் அதிக அளவிலான மழை பெய்ததன் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டது. கேரளாவில் அதிக மழை பெய்ததும், காற்றின் அளவு குறைந்ததற்குக் காரணம் என்கின்றனர் மின்சார வாரியத்தைச் சேர்ந்தவர்கள்.

Sponsored


காற்றின் மூலம் செய்யப்படும் மின் உற்பத்தி குறைந்திருந்தாலும், மழை அதிகம் பெய்ததால் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் 1,349.64 GWH மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 412.93 GWH மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக அளவிலான தண்ணீர் மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் இருக்கின்றன. அங்கு மழை அதிக அளவில் பெய்த காரணத்தால், 100 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையங்கள் தற்போது 1,500 மெகா வாட் வரை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1960-களின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் நீர் ஆலை மின்சார உற்பத்தி மையங்கள். இதுவரை, இந்த நீர் ஆலைகளில் தென்கிழக்கு பருவமழையின்போது தண்ணீரைத் தேக்கிவைத்து கோடைக்காலத்தில் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அணைகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் விளைவாக நீர் ஆலைகள் நிற்காமல் ஓடி மின்சார உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருந்த மின் தட்டுப்பாடு, இந்த ஆண்டு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.Trending Articles

Sponsored