"மூத்தவர் இருக்க இளையவரான ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம்!" - தம்பிதுரை காட்டம்!



Sponsored



"அ.தி.மு.க-வையும்,பா.ஜ.க-வையும் ஒழிப்பதே லட்சியம்'னு ஸ்டாலின் சொல்லியிருக்கார். அவருக்கு அந்த சக்தி கிடையாது. தி.மு.க-வில் மூத்தவர் இருக்க இளைவரான ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது" என்று மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.


கரூரில், சுமார் 300 கோடி திட்ட மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கட்டட கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அந்த கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூர் மருத்துவக் கல்லூரி, 'மெடிக்கல் சிட்டி' என்கிற அளவுக்கு தரத்துடன் கட்டப்பட்டுவருகிறது. நர்ஸிங், பார்மஸி மற்றும் ஆயுர்வேதம் போன்ற அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இணையான கட்டட வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுவருகிறது. இந்திய அளவில் தரம் வாய்ந்த, அரசு மருத்துவக் கல்லூரியாக கரூர் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

Sponsored


சிலை கடத்தல் வழக்கை சிபிஐ ஏற்க மறுக்கவில்லை. சில ஆவணங்களைக் கேட்டுள்ளது. அதை வழங்க தலைமைச் செயலர் ஒப்புதல் அளித்துள்ளார். அ.தி.மு.க மக்கள் இயக்கமாகச் செயல்பட்டுவருகிறது. அ.தி.மு.க-வை யாராலும் வீழ்த்த முடியாது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு காரணமாக, பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பண மதிப்பிழப்பு காரணமாக விவசாயம்,சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பி.ஜே.பி-யின் எல்லா திட்டங்களையும் அ.தி.மு.க ஏற்றுக்கொள்ளாது.  பி.ஜே.பி-க்கு அ.தி.மு.க வால் பிடிக்கவில்லை. முத்தலாக் கொண்டு வந்தபோது எதிர்க்கவே செய்தோம்.

Sponsored


ஸ்டாலின் தன்னோட லட்சியமாக அ.தி.மு.க-வையும்,பா.ஜ.க-வையும் ஒழிப்பதுதான்'னு பேசியிருக்கிறார். அ.தி.மு.க-வை ஒழிக்கிற அளவுக்கு சக்தி கிடையாது. அவருக்கு பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள். மூத்தவர் இருக்க இளையவரான ஸ்டாலினுக்கு, அன்பழகன் பட்டம் சூட்டியிருக்கிறார். ஆனால், அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவரை அறிமுகப்படுத்தியபோது, 'கலைஞரின் மகன்' என்றுதான் சொன்னார்கள். துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி அறிவிக்கும்போது, வெறும் துரைமுருகன்னுதான் சொன்னாங்க. ஸ்டாலினுக்கு, துரைமுருகன் அளவுக்குக்கூட சுயம் இல்லை. அவரால் அ.தி.மு.க-வை எதுவும் செய்ய முடியாது" என்றார் காட்டமாக.
 



Trending Articles

Sponsored