``மேகதாதுவில் புதிய அணை விரைவில் கட்டப்படும்'' - கர்நாடக அமைச்சர் உறுதி!



Sponsored



'மேகதாது மலைப்பகுதியில், விரைவாக அணை கட்டப்படும்' என்று கர்நாடக மருத்துவக் கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் நேற்று பெங்களூரில் பேட்டியளித்துள்ளார்.

"காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 310 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த காலகட்டத்தில் 82 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. மேகதாதுவில் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கு, ரூபாய் 6,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணையால், பெங்களூரு மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்யும். பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் போக மீதமுள்ள நீர், தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படும். இங்கு, அணை கட்டுவதற்கான ஆய்வுகள் நடத்த உள்ளோம். இதற்காக, நான்கு கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பதுகுறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. விரைவில் மேகதாது அணை கட்டப்படும்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Sponsored


கடந்த ஜூலை மாதம், கர்நாடக முதலமைச்சர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மேகதாது அணை கட்டப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும்" என்று சொல்லியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.

Sponsored




Trending Articles

Sponsored