பினராயி விஜயனை நேரில் சந்தித்து ரூ.15 லட்சம் வழங்கினார் திருமாவளவன்!Sponsoredகேரள முதல்வர் பினராயி விஜயனை, திருமாவளவன் நேரில் சந்தித்து, ரூ.15 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினார்.

கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னர் அறிவித்திருந்தார். தற்போது அவர், 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, இன்று காலை பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.

Sponsored


மேலும், உணவுப்பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும் விரைவில் கேரள மக்களுக்கு அனுப்பப்படும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளதோடு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன என்றார். குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிவாரணப் பொருள்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

Sponsored


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று, நிவாரண நிதி மற்றும் பொருள்களை வழங்கியவர்களுக்கும், தொடர்ந்து வழங்கி வருவோருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும்,  உதவி செய்ய விரும்புவோர், நவம்பர் 5-ம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தைத் தொடர்புக்கொண்டு ஒப்படைக்குமாறும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.Trending Articles

Sponsored