தற்கொலைக்குத் தள்ளிய ஓர் அடி நீள ஆஸ்பெஸ்டாஸ் சீட்! - நர்ஸ் ரேணுகா விவகாரத்தை விளக்கும் அதிகாரிகள்Sponsoredசென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த நர்ஸ் ரேணுகா விவகாரத்துக்குப் பின்னணியில் ஒரு அடி நீளம் உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட்தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை திருவேற்காடு பகுதியை அடுத்த கோலடியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரின் மனைவி ரேணுகா. நர்ஸாகப் பணியாற்றினார். இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்ற பெண்ணுக்கும் கழிவறை கட்டிய சம்பவத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் அமிர்தவள்ளி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரித்தனர். நர்ஸ் ரேணுகா, அவரின் கணவர் கஜேந்திரன் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒருதலைபட்சமாக விசாரணை நடப்பதாகக் கூறி ரேணுகா, காவல் நிலையத்தின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தையடுத்து இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

ரேணுகாவின் தற்கொலை சென்னை போலீஸார் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ரேணுகாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி முடிந்தபிறகும் அந்தப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து புகார் கொடுக்க வருபவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று போலீஸாருக்கு பாடம் எடுக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ரேணுகாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாது. ஆனால், அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டார். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் அவ்வாறு நடந்திருந்தால் உதவி கமிஷனர், துணை கமிஷனர், ஏன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்கூட ரேணுகா தரப்பினர் புகார் கொடுத்திருக்கலாம். எக்காலத்திலும் தற்கொலை எந்தப்பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. இந்தச் சம்பவத்துக்குப்பிறகு போலீஸாருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரேணுகா வழக்கில் விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Sponsored


ரேணுகா தற்கொலை வழக்கை கையில் எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், சென்னை மாநகர காவல்துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், அதற்கு எப்படி விளக்கம் அளிக்கலாம் என்ற ஆலோசனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ரேணுகா விவகாரத்தில் என்ன நடந்தது என்று போலீஸாரிடம் கேட்டதற்கு சில முக்கிய தகவல்கள் வெளியாகின. அதாவது, அமிர்தவள்ளி கொடுத்த புகாரை காவல்துறையினர் விசாரிக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஏனெனில் இது, சிவில் தொடர்புடையது. அமிர்தவள்ளி புகார் கொடுத்ததும் அதை சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கு போலீஸார் அனுப்பியிருந்தால் எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்காது என்கின்றனர் விவரம் தெரிந்த போலீஸார். மேலும், அமிர்தவள்ளி புகார் கொடுத்ததும் அதுதொடர்பாக உளவுப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, உயரதிகாரிகளின் தனிப்படையில் உள்ள போலீஸார் உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுத்திருப்பார்கள். அந்த அறிக்கையையும் எந்த  காவல்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

ரேணுகா விவகாரத்தில் பல உண்மைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க-வினரின் பிரமுகர்கள் தலையீடு காரணம் என்ற தகவலும் உள்ளது. ரேணுகா தற்கொலை செய்தபிறகே முழுமையாக உயரதிகாரிகள் விசாரித்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதை முன்கூட்டியே எடுத்திருந்தால் ரேணுகாவின் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். காவல்துறையை மட்டும் குற்றம் சுமத்தினாலும் பொதுப்பணித்துறை, வருவாய்துறையினருக்கும் பங்கு இருக்கிறது. அதாவது, ரேணுகா, அமிர்தவள்ளி ஆகியோரின் வீடுகள் அமைந்துள்ள இடம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கோலடி ஏரி பகுதியாகும். இந்த ஏரியைத்தான் ஆக்கிரமித்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வீடு கட்டியுள்ளனர். ரேணுகா கட்டிய கழிவறையின் மேற்கூரையால்தான் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது, ஆஸ்பெட்டாஸ் சீட்டின் ஒரு அடி நீளம் அமிர்தவள்ளி வீட்டை ஒட்டியுள்ளது. அதை அமிர்தவள்ளி தரப்பினர் தட்டிக்கேட்டுள்ளனர். அதற்கு ரேணுகா தரப்பினர் நீங்கள் மட்டும் வீட்டின் பின்பக்கத்தில் படி எப்படி கட்டலாம் என்று கூறியுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த ஒரு அடி நீளமுள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் பிரச்னைதான் ரேணுகாவை தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு தள்ளியிருக்கிறது.

பொதுப்பணி, வருவாய்த் துறையினரிடம் பேசினோம். ``கோலடி ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றனர். Trending Articles

Sponsored