தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு! - நிறைவடைந்த தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் வாதம்Sponsoredதினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை அளித்தனர். இதையடுத்து, தகுதிநீக்க வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாகச் சத்தியநாராயணன் அறிவிக்கப்பட்டார்.  

Sponsored


இதன் பிறகு, நடந்த வாதத்தில் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரமும் வாதாடினர். அப்போது, 'எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும்' என பி.எஸ்.ராமனும் 'உச்ச நீதிமன்ற உத்தரவு பொருந்தாது' என அரியமா சுந்தரமும் வாதாடினர். கடந்த 24-ம் தேதியன்று தினகரன் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வாதம் நடந்து வந்தது. அனைத்து தரப்பின் வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி சத்தியநாராயணன்.

Sponsored
Trending Articles

Sponsored