சென்ட்ரல் அருகே கிடந்த நாட்டு வெடிகுண்டு! - சிசிடிவி காட்சிகளை ஆராயும் போலீஸார்Sponsoredசென்னை, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை அருகே நாட்டு வெடிகுண்டு கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று காலை ராஜீவ்காந்தி மருத்துவமனை முன் நடைபாதையில் வெள்ளைத் துணியில் மூடியவாறு மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் வந்த போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், வெள்ளைத் துணியில் மூடியிருந்த பொருள் நாட்டுவெடிகுண்டு எனக் கண்டறியப்பட்டது. 

Sponsored


கூடவே, வெடிகுண்டுக்குப் பயன்படுத்தப்படும் திரிகளும் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்துப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் வெடிகுண்டை யார் அங்கு வைத்தது, எப்போது வைத்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored