வாடகை கட்டாத கடைகளுக்கு சீல் - காரைக்குடி நகராட்சி நிர்வாகம் அதிரடிSponsoredவாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து காரைக்குடி நகராட்சி ஆணையாளர் எடுத்த நடவடிக்கையால் பரபரப்பு  ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்குச் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட வணிக வளாகக் கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்களில் 230 கடைகள் வாடகை செலுத்தி இயங்கி வருகின்றன. இதில் 19 கடைகள் 2017-ம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களாக  நகராட்சியால் உயர்த்தப்பட்ட வாடகையைச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. ரூ.40 லட்சத்துக்கு மேல் வாடகை பாக்கி  வைத்திருக்கும் கடைகளுக்கு  நகராட்சி நிர்வாகம் பல முறை அறிவுறுத்தியும் வாடகை செலுத்தாததால் இன்று புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், கல்லூரி சாலையில் உள்ள கடைகள் என 19 கடைகளுக்கு சீல் வைத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

Sponsored


இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது,`கடைகளுக்கான வாடகை தற்போது பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். நாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் பாதிக்கு மேல் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்று சொல்கிறது நகராட்சி நிர்வாகம். இதையெல்லாம் கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தியிருக்கிறோம். நியாயமான வாடகையை நகராட்சி நிர்ணயம் செய்தால், நாங்கள் அதை செலுத்த தயாராக இருக்கிறோம்’ என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored